என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து

 

 

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால்

எல்லாவற்றையும் செய்வேன்

 

எல்லாவற்றையும் செய்வேன்  -நான்

எல்லாவற்றையும் செய்வேன்

 

உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன்

உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன்

கழுகு போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன்

ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன்          - என்னை

 

கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன்

மகிழ்ச்சியாய் இருப்பதால்       பெலனடைவேன்

எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன்

எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன் - என்னை

 

கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன்

சத்துருவின் சேனைக்குள்ளே  பாய்ந்திடுவேன்

பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன்

இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன்         - என்னை